Thursday, 22 August 2013

ஆன்மீக தேடல்!

ஆன்மீக தேடல் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும் ஒரு உள்ளுணர்வாகும்.மதங்களும் சமயங்களும் அந்த தேடலுக்கு கிடைத்த விடையே!

எந்த ஒரு மதத்தினை எடுத்துக்கொண்டாலும் இரு முக்கிய கருத்துக்களைத் தான் வலியுருத்துகின்றன.

1. அற நெறி 2. இறைவழிப்பாடு

அற நெறி – வாழ்கை நல நெறிகள் – அன்பு,கடமை,ஒழுக்கம்,ஈகை,கற்பு,உயர்வு தாழ்வு அற்ற மன நிலை முதலியன.

இறைவழிப்பாடு - இயற்கையை உணர்ந்து மதித்து வாழ்வது.

பொதுவாக ஒருவர் எந்த மதத்தினை சார்ந்த குடும்பத்தில் பிறக்கின்றாறோ அந்த மதத்தை பின்பற்றுவது இயல்பு.

கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப் பார் நீ
கருத்தேக் கடவுளாய் நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே. (வேதாத்திரி மகரிஷி)

அந்த மதத்தை உயர்வாக நினைப்பதும் மற்ற மதங்களை இழிவாக நினைப்பதும் மனித மாண்பு அன்று.

மதங்களின் பெயரால் சகமனிதர்களை எதிரியாக பார்க்கும் இயல்பினை மாற்றுவோம்.

'உம்மதமே பெரிதென்று பேசுகின்றீர்
எம்மதத்தில் இல்லை ஏழ்மை பஞ்ச மா பாதகங்கள்?'.(வேதாத்திரி மகரிஷி)

எந்த மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றும் உரிமை எல்லாருக்கும் உண்டு..ஆனால் மதம் மாற்றும் உரிமையை யார் கொடுத்தது?

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

1 comment:

  1. உரிமையைக் கேட்டாப் பெற்றுக்கொண்டோம்...கேட்காத உரிமையைத் தந்துவிட்டீர்களென்று கருதி, சிறப்பான வரிகளுக்கும், சிந்தனையைத் தூண்டும் வரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறுகிறேன்.

    ReplyDelete