Friday 29 January 2016

அக்னி ஹோத்ரா

அக்னி ஹோத்ரா.
வீட்டில் அனைவரும் எளிதாக வளர்கக்கூடிய யாகம் அக்னி ஹோத்ரம்.
இதற்கு தேவையான பொருட்கள்
1.சிறிய பிரமிட் வடிவ செம்பு பாத்திரம்
2. பசும் சாண வரட்டி
3. பசு நெய்
௪.உடையாத பச்சரிசி(கைகுத்தல் அரிசியாக இருந்தால் சிறப்பு)

முக்கிய குறிப்பு :சரியான சூரிய உதய நேரம் மற்றும் சூரியன் மாறியும் நேரத்தில் அரிசியை நெய் தடவி அக்னியில் இடவேண்டும்.
அந்தந்த ஊரில் சூரியோதய மற்றும் மறையும்  நேரங்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

சூரியோதயத்தில் செய்ய வேண்டியது: சூரியோதயத்திற்கு நான்கு நிமிடங்களுக்கு முன் அக்னி குண்டத்தில் சிறிது வரட்டிகளை இட்டு அதன் மேல் ஓர் இரு தேக்கரண்டி நெய் விட்டு எரியூட்ட வேண்டும்.
சரியான சூரியோதய நேரத்தில் பின் வரும் மந்திரத்தை சொல்லி அரிசியை அக்னியில் இடவேண்டும்.
சூர்யாய ஸ்வஹா சூர்யாய இதம் ந மம
பிரஜாபதையே ஸ்வஹா பிரஜாபதையே இதம் ந மம . 

சூரியன் மறையும் போது செய்ய வேண்டியது:  சூரியன் மறைய சிறு நிமிடங்கள் முன்பு மேற்கண்டவாறு அக்னியை வளர்த்துசரியாக சூரியன் மறையும் நேரத்தில்  பின் பின் வரும் மந்திரத்தை சொல்லி அரிசியை அக்னியில் இடவேண்டும்.
அக்னையே ஸ்வஹா அக்னையே இதம் ந மம
பிரஜாபதையே ஸ்வஹா பிரஜாபதையே இதம் ந மம . 
இதை செய்வதால் வரும் பலன்கள் :
1.பசும் சாணமும் நெயும் அரிசியும் எரியும் பொழுது உருவாகும் வாயுக்கள் நச்சுக் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தவை.
2. கதிர் வீச்சுக்களின் தாக்கத்தை அழிக்கக் கூடியது என ஆராய்சிகள் கூறுகின்றன.
3. மன அமைதியும் இல்லறத்தில் அமைதியும் இன்பமும் பெருகுவது அனுபவத்தில் கண்ட உண்மை.
4.குழந்தைகளிடத்தில் அமைதியும் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகுகின்றது.
5..நாள் பட்ட தலைவலி மற்றும் சரும நோய்கள் நீங்குகின்றன.
6..இல்லத்தில் எப்பொழுதும் தெய்வீக மணம் கமழ்கிறது.அதனால் மனதில் நேர்மறை எண்ணங்களே மிகுகின்றன.
7..மழை வளம் பெருகி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும்.

எங்கள் வீட்டில் குழந்தைகள் கூட இதை தவறாமல் செய்ய எனக்கு உதவுகின்றனர்.நமது பாரம்பரியம் ..நமது பெருமை...மீண்டும் திரும்புவோம் நம் முனோர்களின் அறிவியலுக்கு...வாழ்க வளமுடன்!