Friday 21 February 2014

தமிழே அமுதே !
அழகிய தமிழ் வாழ்க! 

எம்மொழிக்கும் இல்லாத சிறப்பு எம் தாய் மொழியாம் தமிழுக்கு உண்டு.
தமிழில் உள்ள சிறப்பு ‘ழ’கரம் நம் அழகிய தமிழுக்கு சிகரம்!

நாவின் நுனியை மேல் அண்ணத்தில் ஒரு அழுத்து அழுத்தி தான் “ழ” வை சொல்ல முடியும் இதனை.நவின் நுனியை மேல் அண்ணத்தில் ஆழ்த்தும் போது மூளைக்குள்ளாக இருக்கும் பினியல் சுரப்பி தூண்டப்பட்துகிறது.

"principal seat of the soul" என்று வழங்கப்படும் பீனியல் சுரப்பி உடல்,மனம் மற்றும் ஆன்மிக அறிவை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

”உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்

வைத்த விளக்கும் எரியுதடி

அச்சுள்ள விளக்கு வாலையடி அவி

யாமலெரியுது வாலைப் பெண்ணே” - என்று கொங்கன சித்தர் பாடியுள்ளார்.

பெரும்பாலான மொழிகளின் உச்சரிப்பு நுனி நக்குடனே நின்றுவிடும் நிலையில் நம் தமிழ் மொழியில் உள்ள சொற்களின் உச்சரிப்புக்கள் மூலதாரத்தில் துவங்கி உச்சிவரை உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டுவதாக உள்ளது.அதனால் தானோ என்னவோ பாடியுள்ளான் நம் பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!....என்று.

ஆனால் நம் தாய் மொழியின் சிறப்பு அறியாத பலரும் ‘டமில்’
என்று உச்சரிப்பதோடல்லாமல் அதைப் பெருமையாகவும் நினைக்கும் அவலநிலை என்று மாறுமோ?