Wednesday, 28 August 2013


உரிமை..உரிமை...உரிமை
உரிமை என்பது..
எடுப்பதும் அல்ல
கொடுப்பதும் அல்ல
கேட்டு பெறுவதும் அல்ல
உரிமை என்பது இருப்பது....

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் மீதும்
அனைவருக்கும் உண்டு உரிமை..
மூச்சுக் காற்றை அனுபவிக்க,
கதிரவனில் ஒளியை அனுபவிக்க,
மழையின் வளத்தை அனுபவிக்க,
குயிலின் பாட்டை அனுபவிக்க,
நிலவின் இதத்தை அனுபவிக்க,
மலரின் மணத்தை அனுபவிக்க,
உரிமையைக் கேட்டாப் பெற்றுக்கொண்டோம்?

உரிமை என்பது அனைவருக்கும் உண்டு.....

ஆனால் உன் உரிமை பிறர் உரிமையைப் பறிக்காதவரை....

Thursday, 22 August 2013

ஆன்மீக தேடல்!

ஆன்மீக தேடல் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும் ஒரு உள்ளுணர்வாகும்.மதங்களும் சமயங்களும் அந்த தேடலுக்கு கிடைத்த விடையே!

எந்த ஒரு மதத்தினை எடுத்துக்கொண்டாலும் இரு முக்கிய கருத்துக்களைத் தான் வலியுருத்துகின்றன.

1. அற நெறி 2. இறைவழிப்பாடு

அற நெறி – வாழ்கை நல நெறிகள் – அன்பு,கடமை,ஒழுக்கம்,ஈகை,கற்பு,உயர்வு தாழ்வு அற்ற மன நிலை முதலியன.

இறைவழிப்பாடு - இயற்கையை உணர்ந்து மதித்து வாழ்வது.

பொதுவாக ஒருவர் எந்த மதத்தினை சார்ந்த குடும்பத்தில் பிறக்கின்றாறோ அந்த மதத்தை பின்பற்றுவது இயல்பு.

கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப் பார் நீ
கருத்தேக் கடவுளாய் நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே. (வேதாத்திரி மகரிஷி)

அந்த மதத்தை உயர்வாக நினைப்பதும் மற்ற மதங்களை இழிவாக நினைப்பதும் மனித மாண்பு அன்று.

மதங்களின் பெயரால் சகமனிதர்களை எதிரியாக பார்க்கும் இயல்பினை மாற்றுவோம்.

'உம்மதமே பெரிதென்று பேசுகின்றீர்
எம்மதத்தில் இல்லை ஏழ்மை பஞ்ச மா பாதகங்கள்?'.(வேதாத்திரி மகரிஷி)

எந்த மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றும் உரிமை எல்லாருக்கும் உண்டு..ஆனால் மதம் மாற்றும் உரிமையை யார் கொடுத்தது?

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதிய மில்லை யுயிர்க்கு.

Wednesday, 21 August 2013

சிந்திக்க...

நான்..
உனக்கு பிடித்த நபர் யார் என்று
உன் உள்ளத்தைக் கேட்டு பார்
உன் உள்ளம் சொல்லும்
அது 'நான்' என்று......

தனக்காக வாழ்வது சுய நலம் எனில்
'சுயம்' நலம் இல்லையேல்
பொது நலம் ஏது?
'நான்' விழைவது தானே பொது நலம்?

வீடு,மனைவி,மக்கள்,குடும்பம்
நட்பு,காதல்,புணர்ச்சி,இன்பம்
ஏன் மரணத்தில் கூட மேலோங்கி நிற்பது
நான்,நான்,நான்,தானே...



அழகான பொய்கள் சொன்னாய்..
அதனால் என்னை வென்றாய்..!
உன் பொய்களோடு என் பொய்களும்....
பொய்களை மெய் ஆக்க...
மெய்கள் ஏங்கினாலும்
மெய்யான வாழ்வில் பொய்கள்
பொய்யாக இருக்கும் வரை சுகமே...

Tuesday, 20 August 2013

BECOME AS A CHILD....

When a child is born
Its knowledge is nil.
It does not even know its mother,
Cannot stand,
Its helpless,
But it feels secure....Trust is total.

when it grows knowledge increase,
Desire increases,
helplessness decreases
Insecurity increases..trust is gone .
Problems start......Happiness is GONE!
என் வாழ்வில் பாபாவின் அற்புதங்கள்...!
1
எனக்கு அதுவரை சீரடி பாபாவிடம் பெரிதாக ஈர்ப்பு இருந்ததில்லை...சிலமாதங்களாக என் பெரிய மகன்
பாபாவின் பால் இழுக்கப்பட்டு அவரை வணங்க ஆரம்பித்தான் .நானும் என் மகனுடன் சேர்ந்து வணக்க ஆரம்பித்தேன்.பின் சீரடி செல்ல வேண்டும் என ஓர் உந்துதல். எனவே நானும் அவனும் அவனது நாண்பன் ஒருவனுடன் சீரடி பயணமானோம்.

ஈரோடில் இருந்து சென்னைக்கு காரில் பயணம்.. பின் அங்கிருந்து புனேக்கு விமானத்தில் செல்ல காரில் பயணித்தோம்.கார் சேலம் தாண்டி சிறிது தொலைவு
சென்றிருக்கும்.....கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதியது
.கார் படத்தை பாருங்கள்....ஆனால் மோதியது லாரி ஓட்டுனருக்கு கூட தெரியவில்லை அவர் சென்றுவிட்டார்..கார் ஓட்டியது என் மகன் அருகில் நான் ..எங்கள் இருவருக்கும் ஒரு அதிர்வு கூட இல்லை.இறங்கி வாகனத்தை பார்த்த போழ்து தான் அதிர்ச்சி ...பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்ப நினைத்தோம்.ஆனால் என்மகன் சொன்னது.......

பாபா நேரில் வந்து லாரிக்கும் காருக்கும் இடையே கை வைத்தது போல் உணர்ந்தேன் எனவே நாம் பயணத்தை தொடரலாம் என்றான்.

காரை கட்டி இழித்து செல்லும் வண்டியில் ஈரோடு அனுப்பி விட்டு டாக்ஸ்யில் சென்னை சென்றோம் ...
இதற்கு பின் இன்றுவரை ஒவ்வொரு நாளும் அனுபவங்கள் பல பல ..
தினமும் ஒன்றாக பதிவிடுகிறேன் .சீரடியில் ஏற்பட்ட அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கும் ....ஜெய் சாய் ராம்.
புத்தம் புது பூமி வேண்டும்!

சாதி அழியட்டும் !
மதம் அழியட்டும் !
அகங்காரம் அழியட்டும் !
தான் தனது என்னும் கடும் பற்று அழியட்டும்!
தேசங்களின் எல்லை கோடுகள் அழியட்டும் !
சுய நலம் அழியட்டும் !

புதிய உலகம் மலரட்டும்!!!


பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறு என்ன பெருமை
இதை விட எடுத்து பேசுவதற்கு. வேதாத்ரி மகரிஷி.

உலக மக்களின் உடல்லில் ஓடுகின்ற இரத்தம் பெண்மையின் அன்பளிபல்லவா?

உலகில் உள்ள ஒருவரேனும் பெண்ணில்லாமல் தோன்றியுள்ளனரா?

ஏசுநாதர் கூட ஆண் கலப்பு இல்லாமல் பிறந்தார் என்று கூறப்படுகிறதே தவிர பெண் இல்லாமல் தோன்றவில்லையே?

ஆனால் இத்தகையசிறப்பு வாய்ந்த பெண்மை ஒரு காட்சிப்பொருளாகவும்,போகப் பொருளாகவும் உள்ள அவல நிலை மாற வேண்டும்.

நாகரிக வளர்ச்சியே இல்லத, உடையே அணியாத பழங்குடி மக்களிடம் பெண்களை கவர்ச்சிப் பொருளாக பார்க்கும் நிலை இல்லையே?

இயற்கை பிரபஞ்சதில் உள்ளஒவ்வொருப் பொருளையும் தன் பரிணாம வளர்ச்சியினால் நேரடியாக தந்துள்ளது.எனினும் உயரினங்களின் தோற்றம், காப்பு இவற்றைப் பெண்மையிடத்தே ஒப்புவிதுள்ளது.

பெண் வயற்றில் உருவாகி மேலும் அந்த பெண் பால் உண்டே வளர்ந்தோம்.பெண்ணின் பெருமை உணர்.........

இந்த மாற்றம் நம் ஒவ்வொவொருவர் மனதிலும் அல்லவா ஏற்பட வேண்டும்?

மண் ஆசை,பொன் ஆசை,பெண் ஆசை என்று பெண் ஜடப்பொருள்களின் வரிசையில் அல்லவா சேர்க்கப்படுகிறாள்.

மனித இனத்தின் ஒவ்வொரு தனி நபரும் ஆண் பெண் இருபாலரின் இயல்புகளையும் சேர்ந்தே பெற்றுள்ளோம்.

தண்டனையினாலோ ,சட்டத்தினாலோ உலகை சீர் திருத்த முடியாது.அறிவிலே உயர வேண்டும் உணர வேண்டும்.வளரும் குழந்தைகள் மனதில் ஒழுக்கம் விதைக்கப் பட வேண்டும்.மனம் செம்மையாக வேண்டும் வேண்டும் வேண்டும்!!!!!!!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!