Monday, 2 September 2013

உலகமயமாக்கல்...........எதில்?

மிருகத்தின் கால் வழியே சந்தர்ப்பத்தால்
மிகச் சிறிய மாறுதலைப் பெற்று முன்னும்
ஒரு மனிதன் தோன்றி அவன் வித்தின் மூலம்
உருவான பெருக்கம்தாம் உலக மக்கள்.
பெரு வெள்ளம் கடல் இவை இந்நிலப் பாகத்தைப்
பிரிக்க அடிக்கடிச் சிதறிப் பிரிந்தார் மக்கள்
உருவம் உள்ளம் இரு நிலைகளியக்கம் கண்டால்
ஒரு குடும்பமே உலக மக்கள் எல்லாம்.-வேதாத்ரி மகரிஷி.

                         
வர்த்தக ரீதியாக உலகமயமாக்கல் என்பது சுரண்டலுக்கு தான் வழிவகுக்குமே அல்லாமல் சமத்துவதை ஏற்படுத்தாது.
வர்த்தக ரீதியாக பிற நாடுகளை நம்நாட்டில் அனுமதித்தால் நம் நாட்டு வர்த்தகம் பதிக்கப்படும்,மக்கள் வளம் சுரண்டப்படும்.

நாடு விடுதலைப் பெற்று ஒரு நூற்றாண்டுக்கூட முடியாத நிலையில் கிழக்கிந்திய கம்பனியினர் இந்தியாவிற்குள் எதற்கு வந்தனர் என்பதை மறந்து விட்டோமா?

உலகில் எந்த நாட்டிலாவது இந்தியர்கள் பெரிய அளவில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?

மனித இனத்தின் அதி பயங்கர எதிரி மனிதனே.தன் இனத்தைத் தானே அழிக்கத் துடிக்கும் ஓர் கேவலமான சுயநல வாதியாகிவிட்ட மனிதனிடம் உலகமயமாக்கல் எப்படி சாத்தியம்?

உணர்வுகள் உலகமயமாக்கப்பட வேண்டும்.மனதில் அனைவரும் ஓரினம் எனும் எண்ணம் மலரவேண்டும்.

மனம் மலர்ந்து ஒன்றுப்படவேண்டும். மொழி,நிறம்,கலை,உணவு,வேறுப்பட்ட போதிலும் அனைவரும் மனிதரே என்னும் மனித நேயம் வளரவேண்டும்.அது இல்லையேல் இந்த வர்த்தக ரீதியான உலகமயமாக்கல் அழிவுக்கு வழிவகுக்கும்.



1 comment: