கந்த சஷ்டி கவசம் பாகம் 1
நிஷ்டையும் கைகூடும்.....
கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால்,அதனால்
வல்வினை போகும் துன்பம் போகும் ,நெஞ்சில் பதிபோர்க்கு செல்வம் ஓங்கும் என்னும் உறுதி
மொழியுடன் துவங்கும் தேவராயர் அருளிய கந்த சஷ்டி கவசம் குறித்த ஒரு சிறு அனுபவ
குறிப்பு.
நிஷ்டை கைக்கூட பலமுறைகள் இருந்தாலும் குமரன் அடி நெஞ்சை வைத்து
பாராயணம் செய்யும் போது எளிதில் சித்தியாகும் என்பது எனது அனுபவம்.
துதிப்போர்க்கு
வல்வினைபோம், துன்பம்
போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
அடுத்து வரும் வரிகளில் முருக பெருமானை எழுந்தருள செயும் விதமாக அவர் மேல் மனதை நிலை
நிறுத்த வர்ணனைகளை அளித்துள்ளார்.
ஒரு இடத்தில் அதிர்வுகளையும் கந்தக் களத்தையும் உருவாக்க 1. அலை
இயக்கம் 2.அதிர்வுகள் இரண்டும் தேவை.
1.அலைகளை மன எண்ணங்கள் உருவாக்கும் .
எனவே மனதை முருகன் மேல் நிலைக்க செய்ய முருகனின் மேல் அவரது
உருவத்தின் மேல் தியானமாக பின் வரும் வரிகள்.
He makes us to visualize the complete figure of Lord Muruga
and so your mind takes the form of Lord Muruga and the field around you gets
charcterised.
சஷ்ட்டியை
நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... ... 5
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக ... ... 10
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக ... ... 15
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... ... 5
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக ... ... 10
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக ... ... 15
மனதால் நினைத்து எண்ணஅலைகளை உருவாக்குவதன் மூலம் முருக பெருமான் அங்கு
நிச்சயம் வருவார் .இந்த நம்பிக்கையுடன் குமரன் மேல் மனதை நிலைக்க செய்து பாராயணம் செய்ய நிச்சயம் அவர் ஆற்றலை அங்கு உணர
முடியும்.
2. அதிர்வுகளை உருவாக்கும் மந்திரங்கள்....
ச ர ஹ ண ப வ என்னும் ஆறெழுத்து மந்திரம்.
இதன் அதிர்வுகளை மாற்றி மாற்றி
அதாவது முதல் எழுத்தை கடைசியாக
ர ஹ ண ப வ ச .... இப்படியாக
மாற்றி மாற்றி அதிர்வுகளை ஏற்படுத்தி முருக பெருமானை எழுந்தருள செய்கிறோம்.
சரஹணபவனார்
சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென ... ... 20
வசர ஹணப வருக வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென ... ... 20
வசர ஹணப வருக வருக
அடுத்து பீஜ மந்திரங்களால் தெய்வீக அதிர்வுகளை உருவாக்குகின்றோம்.
ஐயும்
கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
குன்றுதோறும் இருக்கும் குமரனை எண்ணத்தாலும் அதிர்வுகளாலும் எம்மிடம்
வரவழைக்கும் விந்தையை என்னவென்று உரைப்பது.
மந்தரங்கள் உச்சரிக்கப்படும் பொழுது
அது மூச்சுப் பயிற்சியாகவும் மாறுகிறது.
இதனை தொடரும் விதமாக...
சண்முகம்
நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் ... ... 35
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ... ... 40
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் ... ... 45
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ... ... 50
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து ... ... 55
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று ... ... 60
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் ... ... 35
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ... ... 40
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் ... ... 45
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ... ... 50
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து ... ... 55
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று ... ... 60
இப்படியாக எம்மிடம் வந்த முருகனை என்னுள் என் உடலில் எழுந்தருளும்
வித்தை அடுத்து வருவது...
உன்திரு
வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க ... ... 65
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க ... ... 70
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க ... ... 75
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க ... ... 80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க ... ... 85
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க ... ... 90
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க ... ... 95
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க ... ... 65
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க ... ... 70
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க ... ... 75
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க ... ... 80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க ... ... 85
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க ... ... 90
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க ... ... 95
இதன் சிறப்பு என்னவென்றால் நிஷ்டை கைகூட மனம் ஒடுங்க வேண்டும்-அதற்கு
அலை பாயும் மனதை உடலிலே நிலைக்க செய்தால் மனம் ஒடுங்கும் .ஒவ்வொரு உறுப்பிலும்
முருகனின் அருள் நிற்க ஆற்றல் பெருகும்,ஆழ் மனதில் நேர்மறை எண்ணங்கள் பதிவாகும் .(Here
the powerful relaxation technique is used to focus the mind within the body and
also to take the mind to subconscious level and then he puts the positive
affirmations)
1.
எண்ணம் –த்யானம்-அலைகள்
2.
மந்திரங்கள்-அதிர்வுகள்
3.
பிரணாயாமம்(மூச்சு)-மந்திர பாராயணம்.
4.
உடலில் மனதை ஒடுங்க செய்தல்-ஆழ்மனநிலை
5.
ஆழ்மனதில் நேர்மறை எண்ண பதிவுகள்.
இத்தனையையும் ஒருங்க அளித்துள்ள தேவராயன் பெருமானின் அருள் வாக்கு
நிஷ்டையை அளிக்காமல் பொய்த்து போகுமா என்ன?
அருமை.அறிவியலும் ,தத்துவவியலும் சார்ந்த விளக்கம் .
ReplyDeleteNice on your concern on common men. Hats off to you.
ReplyDeleteRajagopal, K, Sri Vasavi College.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....நன்றி..
Deleteஒவ்வொரு விளக்கமும் அருமை...
ReplyDeleteஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி....நன்றி..
DeleteGiven me greater insights.... now I enjoy the kavacham n reap it's benefits... Thanks Mam... Great thoughts ... Great Works...
ReplyDeleteஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி....நன்றி..
Deleteஓவ்வொரு விளக்கமும் மிக அருமை.அதனால் அன்றோ மந்திர பாராயணமும் விரதமும் சேரும் போது அற்புதங்கள் நிகழ்கிறது.
ReplyDeleteஆமாம் சகோதரி...அதை வாழ்வில் அனுபவிக்கிறேன்..
Deleteஓவ்வொரு விளக்கமும் மிக அருமை.அதனால் அன்றோ மந்திர பாராயணமும் விரதமும் சேரும் போது அற்புதங்கள் நிகழ்கிறது.
ReplyDelete