Saturday, 27 February 2016

ஸ்ரீ கணேஸாய நம:
அனைவரின் இஷ்ட தெய்வமாகவும் பிரணவ ஸ்வரூபமாகவும் விளங்கும் கணபதி தேவதாவின் பல நாமங்களில் ஒருசில நாமங்களின் பெயர் காரணங்களை இங்கு தொகுத்து வழங்குகிறேன் !
கணபதி – தேவ கணங்களின் (தேவர்கள்)  அதிபதி
கணேஷா – கணங்களின் தலைவன்
ஓம்காரா – பிரணவ ஓம்கார ஸ்வரூபம்
வக்ரதுண்ட – வளைந்த தும்பிக்கை
ஏகதந்தம் – ஒற்றை தந்தம்
கஜானனம் – யானையின் தோற்றம்
கஜவக்த்ரம் – யானையின் வாய்
லம்போதரம் – பெரிய வயிறு
விகடமேவ – மிகப்பெரிய
விக்ன ராஜம் – தடைகளின் அதிபதி
விநாயகம் – அனைவற்றின் தலைவன்
கௌரி புத்திரன் – பார்வதியின் புதல்வன்
பாலச்சந்திரன் – பிறையை அணிந்தவன்
தூம்ரவாரணன் – சாம்பல் போன்ற நிறத்தவன்
சதுர்புஜம் – நான்கு கரங்களை உடையவன்
மூஷிக வாகனன் – மூஞ்சுருவை வாகனமாக கொண்டவன்
சஷி வர்ணன் – நிலவை போல் ஒளிர்பவன்
புத்திநாதன் – ஞானத்தின் தலைவன்
சித்தி விநாயகன் – வெற்றி அளிப்பவன்
யோகாதிபதி – யோகங்களின் தலைவன்
அனந்த சித் ரூபமயன் – முடிவில்லா ஆன்ம ஞானம் தத்துவம்.
பின்வரும் கணபதியின் பன்னிரண்டு நாமங்களை கூறும் நாரதரால் அருளப்பட்ட ஸ்லோகத்தை அனுதினமும் படித்து வாழ்வில் கல்வி,செல்வம்,புத்திர பாக்கியம் ,வீடுபேறு அடைய இறைநிலை நின்று வாழ்த்துகிறேன் !

நாரத உவாச
ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
பக்தா வாஸம் ஸ்மரேந் நித்யாமயு: காமாத்த ஸித்தயே
ப்ரதமம் வக்ர துண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம் த்ருதீயம் 
க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்த்தகம்
ஸம்போ தரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமே வச
ஸப்தமம் விக்னராஜம் ச தூம்ரவர்ணம் ததாஷ்டகம்
நவமம் பால சந்த்ரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம்
த்வாதஸைதானி நாமானி த்ரி ஸந்த்யம்ய: படேந்நர:
நச விக்னபயம் தஸ்ய ஸர்வஸித்திகரம் ப்ரபோ:
வித்யார்த்தீ லபதே வித்யாம் தனார்த்தி லபதே தனம்
புத்ராத்தீ லபதே புத்ரான் மோக்ஷõர்த்தீ லபதே கதிம்
ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை:
பலம்லபேத் ஸம்வத்ஸரேண ஸித்திம் ச லபதே நாத்ர ஸம்ஸய:
அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யஸ்ச லிகித்வாய: ஸமர்ப்யேத்
தஸ்ய வித்யா பவேத் ஸர்வா கணேஸஸ்ய ப்ரஸாதத:
ஸம்பூர்ணம்


No comments:

Post a Comment