Wednesday 3 February 2016

விளக்கேற்றுவோம்.....பிறந்த நாள் கொண்டாட்டங்களில்...
விளக்கு நமது மரபினுள் ஒன்றிய ஒன்று ! தமிழில் விளக்கு என்னும் வார்த்தைக்கு விளக்குவது என்னும் பொருள் உண்டு.அறியாமை என்னும் இருளை அகற்றுவது ...மெய் ஞானம் என்னும் ஒளியை ஏற்றுவது என்னும் வகையில் அனுதினமும் விளக்கேற்றி வழிப்படும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
பஞ்ச பூத தத்துவங்களில் அக்னி மாசற்றது...சுத்தம் செய்யும் வல்லமை கொண்டது. அக்னி பிழம்புகள் மாசுப்படுவது இல்லை.
அக்னி குண்டத்தில் அக்னியின் செந்நாக்குகள் காளி,காராளி,மனோஜவா,சுலோஹிதா, சுதூம்ரவர்ணா, ஸு:புலின்கினி,விச்வருச்சீ தேவி என்னும் ஏழு நாக்குகளுடன் அழக்காக பிரகாசிப்பதாக முண்டக உபநிஷத்தில் கூறப்படுகிறது.
காளி காராளி ச மனோஜவா ச
சுலோஹிதா யா ச  ஸுதூம்ரவர்ணாI
ஸு:புலின்கிணீ ச விச்வருச்சீ ச  தேவி
லேலேயமானா இதி ஸப்தஜிஹ்வா II
மேலும் வேத காலங்களில் ஒருகுழந்தை பிறக்கும் போது ஏற்றப்படும் தீபம் அக்குழந்தை வளர்ந்து முதியவராகி பின் மரணித்து இடுகாட்டிற்கு செல்லும் வரையில் எரிந்துக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில் பிறந்த நாளில் கேக் வெட்டி மெழுகுவத்தி ஏற்றி அணைப்பது எவ்வகையில் நம் உயர் மார்பிற்கு உட்பட்டதாக முடியும்?
சிந்திபோம்....விளக்கேற்றுவது மங்களம்..   அணைப்பது?
மேலும் அக்னியானது சிவனின் அம்சமாக வழிப்பட வேண்டிய ஒன்று.
புனிதமான நாட்களில் விளக்குகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து கொண்டாடும் மரபை இளம் உள்ளங்களில் ஏற்படுத்தலாமா?
உலகிற்கு வழிகாட்டும் நம் முனோர்களின் மரபை மீண்டும் உலகுக்கு உணர்திவோம்....
விளக்கேற்றி பின்வரும் மஹா ம்ருத்யும் ஜயமந்திரத்தை பாராயணம் செய்து குழந்தைகளை வாழ்த்துவோம்...
ஓம் த்ரயம்பகய் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்


No comments:

Post a Comment