Saturday, 21 November 2015

கந்த சஷ்டி கவசம் ...பாகம்.2.


ஆறுமுகத்தோடு என்னுள்ளும், என்னிடத்தும் எழுதருள செய்த எம் பெருமானை என் வசனம் அசைவுள்ள வரையில் அதாவது என் உயிர் உள்ளவரை என்னுடன் இருந்து என் முன்னும் பின்னும் எக்காலத்தும் எபோழ்த்தும் என்னை காக்கும் படி வேண்டும் வரிகள் பின்வருவன.இதனால் என் மன தைரியம் பெருகி எப்போழ்தும் என்னை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உள்ள உணர்வு பெருகும் நிலையை உணரலாம்...

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க        ... ... 100

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க


அடுத்து ...இன்று பலருக்கும் இருக்கும் பயம் "செய்வினை" செய்வினை பில்லி சூனியம் இருக்கா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும் ..அதனால் பயந்து எப்பொழதும் புலம்புபவர்கள் பலர் உள்ளனர்.

செய்வினை என்பதில் இருந்தே புரிந்துக்கொள்ள வேண்டும் நாம் தீய வினை புரிதிருந்தால் மட்டுமே அது செயல் படும் என்று.மற்றும் இங்கு அய்யா அவர்களின் வரிகள் அது நம்மை அணுகாது என்று உறுதி அளிக்கும் விதமாக உள்ளது. 
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ...:"என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட" அதாவது கருத்துடன் முருகபெருமானை தியானித்து அவனை என்னுள் எழுந்தருள செய்த என் பெயர் சொல்லவும்...
எத்தனை அருமையான உணர்வு பாருங்கள்..

பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்        ... ... 110

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும்        ... ... 115

கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்        ... ... 120

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்        ... ... 125

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட        ... ... 130

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய        ... ... 135

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்        ... ... 140


பிறகு கொடிய விலங்குகளை கூர் வடிவேலால் குத்த சொல்லும் வரிகள்.
இங்கு நான் எடுத்துக்கொள்வது என்னுள் இருக்கும் கொடிய விலங்கின கர்ம பதிவுகள் வடிவேலின் வேலால் குத்தப் படட்டும் என்பது.என்னுள் இருக்கும் விஷம்,கோபம்,வெறி போன்ற குணங்கள் நீங்க வேல் அருள் புரியட்டும்.
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட        ... ... 145

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150


கொடிய நோய்கள் என்னை அணுகாதிருக்க காப்பு..
நோய் வருவதற்கு எதிர்ப்பு சக்தி இன்மை காரணமாகக் கூறப்படுகிறது.எதிர்ப்பு சக்தி உணவால் மட்டுமே வரும் என்பது ஏற்புடையதல்ல.நல்ல உணவு உண்பவர்களுக்கு நோய் வருவதில்லையா?

'மன பயிற்சியே எதிர்காலத்தின் மருந்து ' என்பார் புத்தர்.

மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அனைவரும் நம்புவது இறைவனை.அப்படி இருக்க ஏன் நோய் வரும் முன்னே வராது என அவனருளை நம்பலாமே.அந்த உறுதிப்பாட்டை அளிக்கும் விதமாக பின் வரும் வரிகளை பாராயணம் செய்து உலகில் நோய் இன்றி வாழ வழிவகுக்கிறார்.
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்        ... ... 150

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்        ... ... 155

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்......
தொடரும்.

Friday, 20 November 2015

 கந்த சஷ்டி கவசம் பாகம் 1

நிஷ்டையும் கைகூடும்..... 
கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால்,அதனால் வல்வினை போகும் துன்பம் போகும் ,நெஞ்சில் பதிபோர்க்கு செல்வம் ஓங்கும் என்னும் உறுதி மொழியுடன் துவங்கும் தேவராயர் அருளிய கந்த சஷ்டி கவசம் குறித்த ஒரு சிறு அனுபவ குறிப்பு.
நிஷ்டை கைக்கூட பலமுறைகள் இருந்தாலும் குமரன் அடி நெஞ்சை வைத்து பாராயணம் செய்யும் போது எளிதில் சித்தியாகும் என்பது எனது அனுபவம்.
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

        
காப்பு

அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.

அடுத்து வரும் வரிகளில் முருக பெருமானை  எழுந்தருள செயும் விதமாக அவர் மேல் மனதை நிலை நிறுத்த வர்ணனைகளை அளித்துள்ளார்.
ஒரு இடத்தில் அதிர்வுகளையும் கந்தக் களத்தையும் உருவாக்க 1. அலை இயக்கம் 2.அதிர்வுகள் இரண்டும் தேவை.

1.அலைகளை மன எண்ணங்கள் உருவாக்கும் .
எனவே மனதை முருகன் மேல் நிலைக்க செய்ய முருகனின் மேல் அவரது உருவத்தின் மேல் தியானமாக பின் வரும் வரிகள்.
He makes us to visualize the complete figure of Lord Muruga and so your mind takes the form of Lord Muruga and the field around you gets charcterised.
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார்        ... ... 5

கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக        ... ... 10

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக        ... ... 15

மனதால் நினைத்து எண்ணஅலைகளை உருவாக்குவதன் மூலம் முருக பெருமான் அங்கு நிச்சயம் வருவார் .இந்த நம்பிக்கையுடன் குமரன் மேல் மனதை நிலைக்க செய்து  பாராயணம் செய்ய நிச்சயம் அவர் ஆற்றலை அங்கு உணர முடியும்.

2. அதிர்வுகளை உருவாக்கும் மந்திரங்கள்....
ச ர ஹ ண ப வ என்னும் ஆறெழுத்து மந்திரம்.
இதன் அதிர்வுகளை மாற்றி மாற்றி அதாவது முதல் எழுத்தை கடைசியாக
ர ஹ ண ப வ ச ....        இப்படியாக மாற்றி மாற்றி அதிர்வுகளை ஏற்படுத்தி முருக பெருமானை எழுந்தருள செய்கிறோம்.

சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென        ... ... 20

வசர ஹணப வருக வருக

அடுத்து பீஜ மந்திரங்களால் தெய்வீக அதிர்வுகளை உருவாக்குகின்றோம்.
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்

குன்றுதோறும் இருக்கும் குமரனை எண்ணத்தாலும் அதிர்வுகளாலும் எம்மிடம் வரவழைக்கும் விந்தையை என்னவென்று உரைப்பது.
மந்தரங்கள்  உச்சரிக்கப்படும் பொழுது அது மூச்சுப் பயிற்சியாகவும் மாறுகிறது.
இதனை தொடரும் விதமாக...

சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்        ... ... 35

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்        ... ... 40

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும்        ... ... 45

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண        ... ... 50

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து        ... ... 55

முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று        ... ... 60

இப்படியாக எம்மிடம் வந்த முருகனை என்னுள் என் உடலில் எழுந்தருளும் வித்தை அடுத்து வருவது...

உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க        ... ... 65

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க        ... ... 70

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க        ... ... 75

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க        ... ... 80

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க        ... ... 85

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க        ... ... 90

முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க        ... ... 95

இதன் சிறப்பு என்னவென்றால் நிஷ்டை கைகூட மனம் ஒடுங்க வேண்டும்-அதற்கு அலை பாயும் மனதை உடலிலே நிலைக்க செய்தால் மனம் ஒடுங்கும் .ஒவ்வொரு உறுப்பிலும் முருகனின் அருள் நிற்க ஆற்றல் பெருகும்,ஆழ் மனதில் நேர்மறை எண்ணங்கள் பதிவாகும் .(Here the powerful relaxation technique is used to focus the mind within the body and also to take the mind to subconscious level and then he puts the positive affirmations)

1.       எண்ணம் –த்யானம்-அலைகள்
2.       மந்திரங்கள்-அதிர்வுகள்

3.       பிரணாயாமம்(மூச்சு)-மந்திர பாராயணம்.
4.       உடலில் மனதை ஒடுங்க செய்தல்-ஆழ்மனநிலை
5.       ஆழ்மனதில் நேர்மறை எண்ண பதிவுகள்.

இத்தனையையும் ஒருங்க அளித்துள்ள தேவராயன் பெருமானின் அருள் வாக்கு நிஷ்டையை அளிக்காமல் பொய்த்து போகுமா என்ன?