Friday 11 October 2013

இன்றைய கல்வி ....கேள்விக்குறியாகிப் போனது ஏனோ?

ஒழுக்கக் கல்வி எத்தனைப் பள்ளிகளில் உள்ளது?
எத்தனைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படுகிறோம்?

ஓரின சேர்கை விவகாரத்தில் பத்தாம் பத்தாம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவனை கழிவு நீர் தொட்டியில் தள்ளி கொன்ற சம்பவத்தைப் படிக்கும் போது மனம் பதைக்கிறது....எப்படி உருவகப் போகிறது எதிர்கால சந்ததி?

எனக்குத் தெரிந்த ஒரு மாணவனுக்கும் இது போல நடந்து இன்று படிக்க வேண்டிய பருவத்தில் மனநோயாளியாக அலைந்துக் கொண்டிருகின்றான்!

பெற்றோர்களே பொறுப்பு உங்கள் கையில்!
குழந்தைகளை விடுதிகளில் சேர்ப்பதை தவிருங்கள்!
உங்கள் நேரடி கண்காணிப்பின் கீழ் வளருங்கள்!
ஓரிரு குழந்தைகளை நம்மால் கவனித்து வளர்க்க முடியாத போது..எப்படிபல ஆயிரம் குழந்தைகளை விடுதிகளில் கண்காணிக்க முடியும்? இன்றய சூழ்நிலையில் பிள்ளைகளை கண்டிக்க முடியாத நிலையில் உள்ளனர் ஆசிரியர்கள்.

புற்றீசல் போல்  முளைத்து ஆல் போல் தழைத்து வளர்ந்துள்ள 'தனியார் கல்வி தொழிற் சாலைகள்'  உருவாக்குவது மாணவர்களை அல்ல...'மதிப்பெண் பெரும் இயந்திரங்களை 'தான்.பெற்றோர்களும்      இத்தகைய கல்வி நிறுவனங்களையே நாடுவது கொடுமையிலும் கொடுமை!

தனியார் கல்லூரிகளில் நிர்வாகத்திற்கு பணம்கொடுத்து விட்டு மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்கலாம் எனும் நிலையும் உள்ளது. ..இது கொலை வரை கொண்டு சென்றதில் ஆச்சரியம் இல்லையே!

ஒழுக்க கல்வி மூலம் குழந்தைகள் மனதை பண்படுத்துவதன் மூலமே எதிர்காலம் ஒளிபெறும்..மதிப்பெண்ணா? ..நல்ல மனிதனா? ஏது வேண்டும் உங்களுக்கு? சிந்திப்போம்!

3 comments:

  1. அன்று ஆசிரியர்கள் ஒழுக்க சீலர்களாக சமூகப் பொறுப்பு உடையவர்களாக இருந்தார்கள்.
    சமூக மதிப்பீட்டளவுகள் மாறிவிட்ட நிலையில்
    இனி ஆடுகூட அசைவம் தின்னும்
    மாடு கூட பால் குடிக்கும்.
    உங்கள் அக்கறையை நான் பகிர்கிறேன்.

    ReplyDelete
  2. Nalla manithargal nargunangaloda,naatirku thevai piragu thaan ettil padikum kalvi. Vaazhvatharku mudhal nalla pannbu,nala manam,parantha gunam thevai piragu kalvi thaanaaga amainthu nirkum

    ReplyDelete