Monday, 25 April 2016

ஓம் அறிந்ததும் அறியாததும் !
ஓம்கார ஸ்வரூபாய ஸ்ரீ கணேஷாய நமஹா!
அடிப்படை உண்மைகள்  மூன்று.
1. இறைவன்
2. மனிதன்
3. தோற்றப் பொருள்கள்
இந்த மூன்றின் அடிப்படையை உணர்வதே ஆறாம் அறிவாம் மனித பிறப்பின் நோக்கம். இவ்வனைதின் அடிப்படை அதிர்வாக விளங்குவது சப்த பிரம்மம்,நாத பிரம்மம் எனப்படும் பிரணவ மந்த்ரம் ‘ஓம்’ ஆகும்.
அ + உ + ம் + மௌனம். இவை இணைந்ததே ஓம்காரம்.
அகாரம் :
வாயை திறந்தாலே அகரம் உச்சரிக்கப் பட்டு விடுகிறது.
விழிப்பு நிலையில் புலன்கள் இயங்கும் நிலையை மனோதத்துவ நிபுணர்கள் “பீட்டா” நிலை என்பார்கள். அதாவது 14-40 cycles/sec).
இந்த விழிப்பு நிலையின் எண்ணப் பதிவுகளே கனவு நிலையும்,ஆழ்ந்த தூக்க நிலையும்.எனவே விழிப்பு நிலையே மற்ற மன அலை நிலைகளின் அடிப்படை .அதாவது அனைத்து அனுபவங்களின் ஆரம்ப நிலை.
இந்நிலையை ‘வைஷ்வானரன்’ என்கின்றன உபநிஷத்துக்கள்.
‘அக்ஷரானாம் அகாரே அஸ்மி’, என கீதையில் கிருஷ்ணா பரமாத்மா கூறுகின்றார்.

உகாரம்:
உரக்க ஒலிப்பது. உதட்டில் உருவாகிறது. உகாரம் ஒலிக்கப்படும் போது மனம் ‘அல்பா’( 14-7 cycles/sec)நிலை என்னும் கனவு நிலையை அடைகிறது. இந்நிலையை ‘தைஜஸன்’ என்கின்றன உபநிஷத்துக்கள். இந்நிலையில் மனம் ஆழ்மன (subconscious) நிலையைஅடைகிறது.
இந்த அலை மனநிலையில் மனதிற்கு வலிமை அதிகம். இந்த மனநிலையில் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்.
ம் : ‘தீட்டா’(less than7 cycles/sec) நிலை எனும் தூக்க நிலை .இந்நிலையில் மனம் கிரகிக்கும் நிலையில் இயங்குகிறது.அமைதியான நிலை.மிகவும் ஆழ் மன நிலை.’பிரக்ஞன்’ என்கின்றன உபநிஷத்துக்கள்.
மௌனம் : அர்த்த மாத்திரை என வழங்கப்படும்.மனம் ஆன்மாவில் லயப்பட்டு சமாதி (சமம்+ஆதி =பரம்பொருள்) நிலையில் நிற்பது.
ப்ரணவோ ஹ்யபரம் [ப்ரணவ: ஹி அபரம்] ப்ரஹ்ம ப்ரணவஸ்ச பர: ஸ்ம்ருத:  |
|பூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய:  ||

உருவ நிலையில் தோற்றங்களாகவும் அருவ நிலயில்உயர் பரம் பொருளாகவும் விளங்குவது ஓம்காரமே.
அது எதிலிருந்தும் தோன்றியது இல்லை.அதிலிருந்தும் எதுவும் தின்றுவதும் இல்லை .அகமும் புறமும் ,துவக்கமும் முடிவும் ,பிறப்பும் இறப்பும் அற்ற அனைத்துமான அழிவற்ற ஒன்றே ‘ஓம்’

சமீபத்தில் நாசா சூரியனின் ஒலி ஓம் ஒலியை ஒத்திருப்பதாக கூறியதாக செய்திகள் வந்தன. நாசா கூறினாலும் சரி கூறாவிட்டாலும் சரி.அனைத்து அதிர்வுகளுக்கும் ஆதாரம் ஓம்காரமே”. அம்ருத்
.....தொடரும்.

No comments:

Post a Comment