Monday, 31 August 2015

மரணம் வரும் ஆனால் வராது...
அனைவரும் அறிவோம் என்றோ ஒருநாள் மரணம் வரும் என்று,,,
ஆனால் அது நினைவில் இல்லாமலே வாழ்கின்றோம்,,
மனம் அறியும் மரணம் மாயை என்று,,
உடலுக்கு மரணம் ஒவ்வொரு கணமும்...
ஆனால் "நான்" என்றும் மரிப்பதில்லை....

Wednesday, 26 August 2015

சமூக ஆர்வலர் மற்றும் சமூக நல சங்கங்களின் கவனத்திற்கு!
இயற்கையையும் நதிகளையும் வழிபட்ட மரபினிலே ஒவ்வொரு படிதுறையிலும் கோவில்கள் கட்டி அதை வழிபாட்டு தலங்களாக மாற்றினர் நம் முன்னோர்கள்..இன்று அந்த நிலை மாறி பரிகாரங்கள் செய்வதற்கும், தோஷங்கள் கழிபதற்க்கும், கழிவுகளை கலப்பதற்க்குமாக மாறிவிட்டன புனித நதிகள்! மசுபடுத்துவதால் தோஷங்கள் கழியாது ...பாவங்கள் பெருகும்....
காவேரி நதியை சுத்தம் செய்து ..ஒவ்வொரு படிதுறையிலும் மாலை நேரங்களில் கங்கை கரையில் நடப்பது போல ஆரத்தி வழிபாடு ஏற்பாடு செய்து மக்கள் கூடும் நேரத்தில் அவர்களுக்கு அறிவுரைக் கூறி மீண்டும் அசுதப்படுதாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாமா?
வரும் கால தலை முறையினர் நீரின்றி தவிக்க விடுதல் முறையோ? நீர் வளம் காப்போம்!