Wednesday, 19 March 2014

ஆசை !ஆசை! ஆசை!

ஆசையுள்ள விந்து நாதமே 
மனித உயிர் ஆனது. 
ஆசையின் உந்து வேகமே 
மனித உடல் எடுத்தது .
ஆசையால் வந்த வேகமே 
எழுந்து நிற்க செய்தது. 
ஆசையின் எழுச்சியால் தான் 
வாழ்க்கை ஓட்டம் தொடருது. 
ஆசை நிறைவேறினால் மனம் 
வேறொன்றில் நாட்டம் கொள்ளுது.

உயிரோடு வந்த ஆசை
உயிரோடு தான் போகுமோ?
ஆசை நிராசை ஆவது
திசை மாறியதால் தான் அன்றோ?
உயிரின் நோக்கம் உணர்ந்திடில்
ஆசை நிறை மனம் ஆகாதோ? 

4 comments: