Monday, 8 June 2015

'I AM THAT I AM
நான் நானாகவே இருக்கின்றேன்!'

நானே 'வழி' என்னை அடைய
நானே 'சத்யம்' என்னையன்றி வேறு இல்லை
நானே 'சீவன்' எனக்கு அழிவில்லை
நானே 'ஆதி' எனக்கு முதல் இல்லை
நானே 'அந்தம்' எனக்கு முடிவில்லை
நானே 'உலகம்' என்னிலுருந்து தோன்றியதால்
நானே 'ஜீவாத்மா' இவ்வுடலில் இங்கு உலவுவதால்
நானே 'பரமாத்மா' என்னுள் எல்லாம் அடங்குவதால்
நான் நானாகவே இருக்கின்றேன்!'