Wednesday, 2 April 2014

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி.....
பாடினான் பாரதி அன்று...அவன் கண்ட கனவு நனவாகியது இன்று!

ஆனால் தரமான கல்வியை தரும் பள்ளிகள் தான் இல்லை..

வானுயரக்கட்டிடங்கள்...அழகிய வாகனங்கள்...குளிர்சாதன வசதிகள் கொண்ட படிப்பறைகள்..கணினி தொழில் நுட்பத்துடன் வகுப்பறைகள்....

யோகா ..வாய்ப்பாட்டு,கராத்தே,நீச்சல் எனும் விளம்பரங்கள்..

பலவகையில் பணத்தை பிடுங்கும் யுக்திகள்...

ஆனால் எந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் உள்ளார்கள்.?
ஒழுக்கக் கல்வி உண்டா?

சமசீர் கல்விமுறை அமலுக்கு வந்தும் தங்கள் பெயரில் மெட்ரிக் பள்ளி எனும் பெயரை ஓட்ட வைத்திருக்கும் கொள்ளை கும்பல் ..

இன்று பெரும்பாலான சிறந்த ஆசிரியர்கள் அரசு பள்ளிகளிலேயே உள்ளனர்.ஆனால் சிறந்த மாணவர்கள் அவர்களுக்கு கிடைபதில்லை.

பெற்றோர்களுக்கு தேவை...மதிப்பெண் முட்டை போடும் broiler கோழி பண்ணைகள்...

மாணவர்களின் எதிர்காலம்....?
கல்வி முறையில் மற்றம் வேண்டும்....செய்வார்களா? சொல்லுங்கள் மக்களே செய்வார்களா?
 —